குட்கா கடத்திய தொழிலாளி கைது


குட்கா கடத்திய தொழிலாளி கைது
x

கர்நாடகாவில் இருந்து கூடலூருக்கு குட்கா கடத்திய தொழிலாளி கைது செய்யப்பட்டார்.

நீலகிரி

கூடலூர்,

தமிழக-கர்நாடகா எல்லையான கக்கநல்லா சோதனைச்சாவடியில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நிக்கோலஸ் உள்ளிட்ட போலீசார் வாகன சோதனை செய்தனர். அப்போது கர்நாடகா மாநிலத்தில் இருந்து கூடலூர் நோக்கி வந்த ஒருவரை பிடித்து விசாரித்தனர்.

மேலும் அவர் வைத்திருந்த பையை சோதனை செய்தனர். அதில் 18 பண்டல்களில் 270 பாக்கெட்டுகளில் குட்கா இருப்பதும், கடத்தி வந்ததும் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து கர்நாடகா மாநிலம் குண்டல்பெட்டை சேர்ந்த தொழிலாளியான ராமசாமி (வயது 56) என்பவரை பிடித்து மசினகுடி போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். பின்னர் சப்-இன்ஸ்பெக்டர் சிக்கந்தர் வழக்குப்பதிவு செய்து, ராமசாமியை கைது செய்தார். மேலும் அவரிடம் இருந்த குட்கா பறிமுதல் செய்யப்பட்டது.



Next Story