சேலம் வழியாக சென்ற தனியார் சொகுசு பஸ்சில் கடத்திய ரூ.20 ஆயிரம் குட்கா பறிமுதல்-வாலிபர் கைது


சேலம் வழியாக சென்ற தனியார் சொகுசு பஸ்சில் கடத்திய ரூ.20 ஆயிரம் குட்கா பறிமுதல்-வாலிபர் கைது
x

சேலம் வழியாக சென்ற தனியார் சொகுசு பஸ்சில் கடத்திய ரூ.20 ஆயிரம் மதிப்பிலான குட்கா பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக வாலிபர் ஒருவரை போலீசார் கைது செய்தனர்.

சேலம்

கருப்பூர்:

ரகசிய தகவல்

தமிழகத்தில் தடை செய்யப்பட்ட புகையிலை மற்றும் குட்கா பொருட்கள் கடத்தி செல்பவர்களை போலீசார் கைது செய்து வருகின்றனர். அதன்படி சேலம் மாவட்ட போலீசாரும் புகையிலை பொருட்களை பறிமுதல் செய்ய தீவிர வாகன சோதனை, ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் பெங்களூருவில் இருந்து தேனி மாவட்டம் கம்பம் செல்லும் தனியார் சொகுசு பஸ்சில் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை கடத்தி வருவதாக நேற்று கருப்பூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் தமிழரசி, சப்-இன்ஸ்பெக்டர் ராஜா மற்றும் போலீசார் சேலம் அருகே கருப்பூர் சுங்கச்சாவடியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

கைது

அப்போது சுங்கச்சாவடிக்கு வந்து நின்ற தனியார் சொகுசு பஸ்சில் ஏறி போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். அதில் பஸ்சின் பின் வரிசையில் உள்ள சீட்டுக்கு அடியில் ஒரு மூட்டையில் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் கடத்தி செல்வது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து குட்கா மூட்டையை போலீசார் பறிமுதல் செய்தனர். கடத்தப்பட்ட குட்காவின் மதிப்பு ரூ.20 ஆயிரம் என தெரிவிக்கப்பட்டது. போலீசார் விசாரணையில் குட்காவை கடத்தி வந்தது சேலம் நிலவாரப்பட்டி மணியக்காரர் தெருவை சேர்ந்த வினோத் (வயது 32) என்பது தெரியவந்தது. இதையடுத்து வினோத்தை போலீசார் கைது செய்தனர்.

விசாரணை

மேலும் பஸ்சை ஓட்டி வந்த தேனி மாவட்டம் சின்னமனூர் நடுத்தெருவை சேர்ந்த முத்துகிருஷ்ணன் (40), அதே பகுதியை சேர்ந்த கண்டக்டர் செந்தில் (46) ஆகியோரிடம் விசாரித்தனர். அதில் அடையாளம் தெரியாத நபர் ஆயிரம் ரூபாய் கொடுத்து தேனியில் உள்ள ஆஷிக் என்பவரிடம் இந்த மூட்டையை கொடுக்க சொன்னதாக தெரிவித்தனர்.

இதைத்தொடர்ந்து போலீசார் கம்பத்திற்கு பஸ்சில் சென்று அங்கு பயணிகளை இறக்கி விட்ட பின்னர் டிரைவர், கண்டக்டரை கருப்பூர் போலீஸ் நிலையத்துக்கு கொண்டு வந்து விசாரிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.


Next Story