சென்னைக்கு கடத்த முயன்ற ரூ.3.38 லட்சம் குட்கா, காருடன் பறிமுதல்


சென்னைக்கு கடத்த முயன்ற ரூ.3.38 லட்சம் குட்கா, காருடன் பறிமுதல்
x
தினத்தந்தி 7 Sept 2023 1:00 AM IST (Updated: 7 Sept 2023 1:01 AM IST)
t-max-icont-min-icon
கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி வழியாக சென்னைக்கு காரில் கடத்த முயன்ற ரூ.3 லட்சத்து 38 ஆயிரம் மதிப்புள்ள குட்காவை போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக டிரைவர் கைது செய்யப்பட்டார்.

வாகன சோதனை

கிருஷ்ணகிரி தாலுகா போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அமர்நாத் மற்றும் போலீசார் சுங்கச்சாவடி அருகில் நேற்று முன்தினம் மதியம் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது பெங்களூருவில் இருந்து ஒரு கார் வேகமாக வந்து கொண்டிருந்தது.

போலீசார் அந்த காரை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் காரில் தடை செய்யப்பட்ட குட்கா, பான்பராக், பான்மசாலா, ஹான்ஸ் என மொத்தம் 284 கிலோ புகையிலை பொருட்கள் இருந்தன. அவற்றின் மதிப்பு ரூ.3 லட்சத்து 38 ஆயிரத்து 700 ஆகும்.

டிரைவர் கைது

அவற்றையும், காரையும் போலீசார் பறிமுதல் செய்தனர். அதை கடத்தியதாக விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள கிருஷ்ணாபுரத்தை சேர்ந்த முருகானந்தன் (42) என்பவரை போலீசார் கைது செய்தனர்.

விசாரணையில் அந்த குட்கா பெங்களூருவில் இருந்து கிருஷ்ணகிரி வழியாக சென்னைக்கு கடத்த முயன்றது தெரிய வந்தது. அவற்றை போலீசார் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story