ஜி.வி.பிரகாஷ் நடித்த பென்சில் பட டைரக்டர் மணி நாகராஜ் மரணம்
ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் கடந்த 2016-ல் வெளியான `பென்சில்' படத்தை டைரக்டு செய்து பிரபலமானவர் மணி நாகராஜ். இந்த படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்தது.
சென்னை,
ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் கடந்த 2016-ல் வெளியான `பென்சில்' படத்தை டைரக்டு செய்து பிரபலமானவர் மணி நாகராஜ். இந்த படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்தது. இவர் கவுதம் மேனனுடன் காக்க காக்க படம் முதல் விண்ணைத்தாண்டி வருவாயா படம் வரை உதவியாளராக பணியாற்றி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
அடுத்து `வாசுவின் கர்ப்பிணிகள்' என்ற படத்தை இயக்கி வந்தார். இதில் நாசர், கோபிநாத், சீதா, வனிதா, அனிகா சுரேந்திரன், உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். 4 பெண்களின் பிரச்சினைகளை மையமாக வைத்து தயாராகி உள்ளது. இந்த படத்தை விரைவில் திரைக்கு கொண்டு வர ஏற்பாடுகள் நடந்தன.
இந்த நிலையில் மணிநாகராஜுக்கு நேற்று திடீர் மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்தார். அவருக்கு வயது 46. இளம் இயக்குனரான மணிநாகராஜ் மறைவு திரையுலகினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இறுதிச்சடங்கு இன்று (வெள்ளிக்கிழமை) நடக்கிறது.