மேலூர் பகுதியில் கரும்பு விவசாயிகளிடம் குறைகளை கேட்ட எச்.ராஜா
மேலூர் பகுதியில் பா.ஜ.க. முன்னாள் தேசிய தலைவர் எச்.ராஜா கரும்பு விவசாயிகளிடம் குறைகளை கேட்டறிந்தார்.
மதுரை
மேலூர்,
மேலூர் பகுதியில் பா.ஜ.க. முன்னாள் தேசிய தலைவர் எச்.ராஜா கரும்பு விவசாயிகளிடம் குறைகளை கேட்டறிந்தார். இதையொட்டி நாவினிப்பட்டி, எட்டிமங்கலம் ஆகிய இடங்களுக்கு சென்று தமிழக அரசு பொங்கல் கரும்பு கொள்முதல் குறித்து கேட்டார். அப்போது விவசாயிகள் 6 அடிக்கு அளந்து அந்த உயரமான கரும்புகளை மட்டுமே வாங்குவதால் மீதமுள்ள கரும்புகள் வீணாகி நஷ்டம் ஏற்படுகிறது எனவும், வெட்டுக்கூலி என செலவுகள் என கழித்து கரும்பு ஒன்றுக்கு 16 ரூபாய் தருவதால் நஷ்டம் ஏற்படுவதாகவும் விவசாயிகள் தெரிவித்தனர். எச்.ராஜாவுடன் மேலூர் நிர்வாகி ரகு என்ற விஜயராகவன் உடனிருந்தார்.
Related Tags :
Next Story