சூறைக்காற்றுடன் ஆலங்கட்டி மழை
குடியாத்தம் பகுதிகளில் சூறைக்காற்றுடன் ஆலங்கட்டி மழை ெபய்தது. இதில் மரங்கள் மற்றும் மின்கம்பங்கள் சாய்ந்தன.
சூறைக்காற்றுடன் மழை
குடியாத்தம் நகரம் மற்றும் சுற்றுப்புற கிராமப் பகுதிகளில் கடந்த ஒரு வாரமாக பகல் நேரங்களில் கடுமையான வெயில் சுட்டெரித்தது. இதனால் அனல் காற்று வீசியது. வயதானவர்கள், பெண்கள், குழந்தைகள் பகல் நேரங்களில் வீட்டை விட்டு வெளியே வர மிகவும் அச்சப்பட்டனர். இரவு நேரங்களிலும் அனல் காற்று வீசியது.
இந்தநிலையில் நேற்று மாலை குடியாத்தத்தில் சுமார் அரை மணி நேரம் குளிர்ந்த காற்றுடன் மழை பெய்தது. குடியாத்தத்தை அடுத்த பரதராமி பகுதியில் ஒரு மணி நேரம் சூறைக் காற்றுடன் ஆலங்கட்டி மழை பெய்தது.
மின்கம்பங்கள் சாய்ந்தன
இந்திரா நகர் பகுதியில் ஏராளமான மின்கம்பங்கள் சாய்ந்தன. வீடுகளின் கூரைகள் காற்றில் பறந்தது. பல இடங்களில் மரங்கள் சாய்ந்தன. அதேபோல் குடியாத்தம் சுற்றுப்புற கிராமங்களான கல்லப்பாடி, சைனகுண்டா உள்ளிட்ட கிராம பகுதிகளிலும் நேற்று மாலை லேசான மழை பெய்தது. இதனால் வெப்பம் தணிந்து, குளிர்ந்த காற்று வீசியது. பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.