முடி திருத்துவோர் மருத்துவ சமுதாய சங்க கூட்டம்


முடி திருத்துவோர் மருத்துவ சமுதாய சங்க கூட்டம்
x
தினத்தந்தி 25 Jan 2023 6:45 PM GMT (Updated: 2023-01-26T00:17:01+05:30)

கோவில்பட்டியில் முடி திருத்துவோர் மருத்துவ சமுதாய சங்க கூட்டம் நடந்தது.

தூத்துக்குடி

கோவில்பட்டி:

கோவில்பட்டியில் வட்டார முடி திருத்துவோர் மருத்துவ சமுதாய சங்க கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஓய்வு பெற்ற போலீஸ் இன்ஸ்பெக்டர் வேலாயுதம் தலைமை தாங்கினார். சங்கத் தலைவர் சோலையப்பன் முன்னிலை வைத்தார். பொதுச்செயலாளர் மகேந்திரன் வரவேற்றார். வழக்கறிஞர் செல்வ சூடாமணி, பி.எஸ்.என்.எல். செல்லத்துரை ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள். கூட்டத்தில், வீடு இல்லாத மருத்துவ சமுதாய மக்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா பெற்றுக் கொடுப்பது, தாய், தந்தையரை இழந்த குழந்தைகளுக்கு 1-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை இலவச கல்வி வசதி கட்டாயமாக செய்து கொடுப்பது, மருத்துவ சமுதாய மக்களுக்கு 5 சதவீத இடஒதுக்கீடு பெற மாநில, மத்திய அரசின் கவனத்திற்கு கொண்டு செல்வது என்பன உள்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில் பொருளாளர் சங்கர், செயலாளர் செல்வம், துணை தலைவர் சண்முகநாதன், துணைச் செயலாளர் முருகன், இணைச் செயலாளர் மாடசாமி, செயற்குழு உறுப்பினர் கணேசன் மற்றும் சந்திரமோகன், காளியப்பன், சண்முகம், காளிமுத்து, கருப்பசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story