முடி திருத்தும் தொழிலாளர் நலச்சங்க கூட்டம்
முடி திருத்தும் தொழிலாளர் நலச்சங்க கூட்டம் நடந்தது.
ஆண்டிமடம் பகுதியில் மருத்துவர் சமூக முடி திருத்தும் தொழிலாளர் நலச்சங்கத்தின் புதிய கிளை கூட்டம் பத்தினியாயி அம்மன் கோவில் வளாகத்தில் நடைபெற்றது. கூட்டத்தில் புதிய கிளைக்கு உறுப்பினர்கள், நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இதில் சங்க தலைவராக ஆசை பாஸ்கர், துணைத்தலைவராக கொளஞ்சி, செயலாளராக சக்தி பாஸ்கர், இணை செயலாளராக பழனிசாமி, துணை செயலாளராக இளவரசன், பொருளாளராக முத்து, அவை தலைவராக சண்முகமும், கவுரவ தலைவராக சுப்பிரமணி, சங்க ஆலோசகராக அன்பழகன் ஆகியோர் அனைத்து உறுப்பினர்கள் முன்னிலையில் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
இதைத்தொடர்ந்து நடைபெற்ற கூட்டத்தில், புதிய உறுப்பினர்கள் சேர்க்கப்பட வேண்டும். மாத சந்தா வசூலித்து சங்க வளர்ச்சிக்கு பயன்படுத்த வேண்டும். மாதத்தில் வரும் அமாவாசை, பவுர்ணமி ஆகிய நாட்களை விடுமுறை நாளாக கடைபிடிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் மாவட்ட, வட்டார சங்க நிர்வாகிகள் மற்றும் ஆண்டிமடம் பகுதி மருத்துவ ர் சமூக முடி திருத்தும் தொழிலாளர்கள் என பலர் கலந்து கொண்டனர்.