முடி திருத்தும் தொழிலாளர் சங்க கூட்டம்
முடி திருத்தும் தொழிலாளர் சங்க கூட்டம் நடந்தது.
மதுரை
தமிழ்நாடு முடி திருத்தும் தொழிலாளர்கள் மத்திய சங்க கூட்டம் கள்ளிக்குடி பகுதியில் நடந்தது. மாநில துணை தலைவர் கிளாதரி வீ.ராஜ் தலைமையில் நடந்தது. செந்தில் வரவேற்று பேசினார். மாவட்ட அமைப்பு செயலாளர் வேலு, மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சசி சிந்து, மாவட்ட பொருளாளர் ஆசைதம்பி ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக, மாநில இணை பொது செயலாளர் முருகேசன் கலந்து கொண்டார். நிகழ்ச்சியில், சங்க உறுப்பினர்களுக்கு அடையாள அட்டையும், வீட்டுமனை பட்டாவும் வழங்கப்பட்டது. இதனை தொடர்ந்து புதிய நிர்வாகிகளும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். முடிவில் துணை தலைவர் நல்லு நன்றி கூறினார்.
Related Tags :
Next Story