பாதியில் நிறுத்தப்பட்ட சாலை பணி


பாதியில் நிறுத்தப்பட்ட சாலை பணி
x

எரியோடு அருகே, பாதியில் நிறுத்தப்பட்ட சாலை பணியால் வாகன ஓட்டிகள் பரிதவித்து வருகின்றனர்.

திண்டுக்கல்

திண்டுக்கல்லில் இருந்து எரியோடு, கோவிலூர், குஜிலியம்பாறை, பாளையம் வழியாக கரூர் வரை நான்கு வழிச்சாலை அமைக்கப்பட்டு வருகிறது. இந்த சாலையின் வழியாக இரவு, பகலாக பஸ், லாரி, கார், வேன் மற்றும் இரு சக்கர வாகனங்கள் அதிக அளவில் சென்று வருகின்றன. இந்தநிலையில் தொட்டணம்பட்டி பகுதியில் வளைவாக உள்ள சாலையை நேராக்காமல் அப்படியே அமைத்திருப்பதால் அடிக்கடி விபத்து ஏற்பட்டு வருகிறது.

இதேபோல் எரியோடு ராமசாமி நகரில், திண்டுக்கல் சாலையில் பெட்ரோல் விற்பனை நிலையம் முன்பு பழைய சாலை தோண்டப்பட்டு ஜல்லிக்கற்கள் பரப்பப்பட்டது. ஆனால் இதுவரை சாலை அமைக்கும் பணி நடைபெறவில்லை. இதனால் இரவு நேரத்தில் இரு சக்கர வாகனங்களில் செல்வோர் ஜல்லிக்கற்கள் வழுக்கி கீழே விழுந்து காயம் அடையும் சம்பவங்கள் அரங்கேறி வருகிறது.

மேலும் அப்பகுதியில் சாலையோரத்தில் உள்ள மின்சார டிரான்ஸ்பார்மர் மீது வாகனங்கள் மோதி பெரும் விபத்து ஏற்படும் சூழல் உள்ளது. எனவே அந்த மின்சார டிரான்ஸ்பார்மரை மாற்றி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஜல்லிக்கற்கள் பரப்பப்பட்டு, பாதியில் நிற்கும் சாலை பணியை துரிதப்படுத்த வேண்டும். இதேபோல் சாலையில் வேகத்தடைகளை எளிதில் கண்டுபிடிக்கும் வகையில், வெள்ளை நிற வர்ணம் பூச வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

----------


Next Story