கைப்பபந்து போட்டி பரிசளிப்பு விழா


கைப்பபந்து போட்டி பரிசளிப்பு விழா
x
தினத்தந்தி 20 Jan 2023 12:15 AM IST (Updated: 20 Jan 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

பொத்தகாலன்விளையில் கைப்பபந்து போட்டி பரிசளிப்பு விழா நடைபெற்றது.

தூத்துக்குடி

தட்டார்மடம்:

தட்டார்மடம் அருகே உள்ள பொத்தகாலன்விளையில் புனித திருக்கல்யாண திருத்தல திருவிழாவையொட்டி மாவட்ட அளவிலான மின்னொளி கைப்பந்து போட்டிகள் நடந்தன, அங்குள்ள மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் 3 நாட்கள் நடந்த போட்டியில் பொத்தகாலன்விளை, போலையர்புரம் அதிசயபுரம், சாத்தான்குளம், மெஞ்ஞானபுரம், உள்ளிட்ட 16 அணிகள் கலந்து கொண்டன. போட்டிகளை புனித திருக்கல்யாண மாதா திருத்தல அதிபர் வெனிசுகுமார் ஜெபித்து தொடங்கி வைத்தார்.

இறுதி போட்டியில் போலையர்புரம் அணியும், அதிசயபுரம் அணியும் மோதின. இதில் வென்று அதிசயபுரம் அணி முதல் பரிசை தட்டிச்சென்றது. 2-ஆம் பரிசு போலையர்புரம் அணிக்கும், 3-ஆம் பரிசு மெஞ்ஞானபுரம் அணிக்கும், 4-ஆம் பரிசு பொத்தகாலன்விளை அணிக்கும் கிடைத்தது.

பின்னர் நடந்த பரிசளிப்பு விழாவில் சாஸ்தாவி நல்லூர் விவசாய நலச்சங்க தலைவர் எட்வின் காமராஜ் கலந்து கொண்டு பரிசுகளை வழங்கினார். இவ்விழாவில் மாவட்ட கவுன்சிலர் தேவவிண்ணரசி, சாஸ்தாவிநல்லூர் ஊராட்சித் தலைவர் திருக்கல்யாணி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


Next Story