மாற்றுத்திறனாளிகள் சங்க கூட்டம்


மாற்றுத்திறனாளிகள் சங்க கூட்டம்
x
தினத்தந்தி 2 Feb 2023 12:15 AM IST (Updated: 2 Feb 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

சாத்தான்குளத்தில் மாற்றுத்திறனாளிகள் சங்க கூட்டம் நடந்தது.

தூத்துக்குடி

தட்டார்மடம்:

தென்மண்டல ஒருங்கிணைந்த மாற்றுத்திறனுடையோர் முன்னேற்ற சங்க தேர்தலில் தேர்வு செய்யப்பட்ட நிர்வாகிகளுக்கு பாராட்டு விழா சாத்தான்குளம் செட்கோ அரங்கில் நடைபெற்றது. தலைவராக பேர்சில், துணை தலைவர்களாக ஐசக் ஜோசப், சிவனேசன், செயலராக அழகு லட்சுமி, பொருளாளராக ராமகிருஷ்ணன் மற்றும் நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.

2 மாதங்களுக்கு ஒரு முறை நிர்வாகிகள் கூட்டம் ஒவ்வொரு ஒன்றியத்திலும் நடைபெற வேண்டும். சங்கம் மூலம் சுய உதவிக் குழுக்கள் புதிதாக ஆரம்பிக்கப்படும். தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் சங்க கூட்டமைப்பு நடத்தும் மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் உறுப்பினர்கள் அவசியம் பங்கேற்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் கூட்டத்தில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டன. முடிவில் சாத்தான்குளம் வட்டார தலைவர் ஹெர்சோம் நன்றி கூறினார்.


Next Story