மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்


மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 2 Dec 2022 12:15 AM IST (Updated: 2 Dec 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

மயிலாடுதுறை தாசில்தார் அலுவலகம் முன்பு மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்

மயிலாடுதுறை

மயிலாடுதுறை தாசில்தார் அலுவலகம் முன்பு தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் மற்றும் வழக்காடு மன்றம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் கணேசன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் புருஷோத்தமன் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து பேசினார். மாற்றுத்திறனாளிகளின் 2016 புதிய சட்டத்தை வரையறை செய்து இதுவரை அமல்படுத்தாமல் உள்ளதை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் ஏராளமான மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட பொருளாளர் லட்சுமி நன்றி கூறினார்.


Next Story