மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்
ஓமலூர்:-
ஓமலூரை அடுத்த காடையாம்பட்டி தாலுகா அலுவலகம் முன்பு தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளி மற்றும் பாதுகாப்போர் உரிமைக்கான சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு சங்க ஒன்றிய தலைவர் கோவிந்தராஜ் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் ஹரிகிருஷ்ணன், செயலாளர் குணசேகரன், பொருளாளர் கனகராஜ், துணை செயலாளர் அமலா ராணி, மாவட்ட குழு உறுப்பினர் செல்வம், கம்யூனிஸ்டு கட்சியின் ஓமலூர் தாலுகா தலைவர் ஈஸ்வரன் ஆகியோர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். ஆர்ப்பாட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் முகாம் நடத்த அனுமதி வழங்க வேண்டும். மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் ஒன்றிய துணைத்தலைவர் ரவி, இணை செயலாளர் அரிசியம்மாள், செயலாளர் ஜெகநாதன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.