மாற்றுத்திறனாளிகள், முதியவர்கள் சக்கர நாற்காலி மூலம் வாக்குப்பதிவு
மாற்றுத்திறனாளிகள், முதியவர்கள் சக்கர நாற்காலி மூலம் சென்று தங்களுடைய வாக்குகளை பதிவு செய்தனர்.
பெரம்பலூர்
பெரம்பலூர் மாவட்டத்தில் இடைத்தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு நடைபெற்ற 11 வாக்குச்சாவடிகளில், ஒரு வாக்குச்சாவடிக்கு 4 அலுவலர்கள் வீதம் மொத்தம் 44 பேர் பணியில் ஈடுபட்டனர். ஒரு வாக்குச்சாவடிக்கு 7 போலீசார் வீதம் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் ஊர்க்காவல் படை வீரர்களும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். வாக்குச்சாவடியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசார், ஊர்க்காவல் படையினர் மற்றும் அலுவலர்கள், ஊழியர்கள் தாமாகவே முன்வந்து முதியவர்கள், மாற்றுத்திறனாளிகளை சக்கர நாற்காலியில் அமர வைத்து வாக்களிக்க அழைத்து சென்றதை காணமுடிந்தது. பல இடங்களில் முதியவர்களை வாக்களிக்க அவர்களது உறவினர்களே அழைத்த வந்து வாக்களித்து வைத்து அழைத்து சென்றனர்.
Related Tags :
Next Story