மாற்றுத்திறனாளிகள்- நலிவுற்றோர்களுக்குவாகன அங்காடி வழங்கும் திட்டம்


மாற்றுத்திறனாளிகள்- நலிவுற்றோர்களுக்குவாகன அங்காடி வழங்கும் திட்டம்
x
தினத்தந்தி 29 May 2023 12:15 AM IST (Updated: 29 May 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த மாற்றுத்திறனாளிகள்- நலிவுற்றோர்களுக்கு வாகன அங்காடி வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.என கலெக்டர் சாருஸ்ரீ தெரிவித்துள்ளார்.

திருவாரூர்

கொரடாச்சேரி:

திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த மாற்றுத்திறனாளிகள்- நலிவுற்றோர்களுக்கு வாகன அங்காடி வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.என கலெக்டர் சாருஸ்ரீ தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

வாகன அங்காடி

திருவாரூர் மாவட்டத்தில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் கீழ் உள்ள மகளிர் சுயஉதவிக்குழுக்களின் உற்பத்தி பொருட்களை விற்பனை செய்திடவும், சிற்றுண்டிகள், உணவு வகைகள், பழச்சாறு வகைகள் விற்பனை செய்திட ஏதுவாக நடமாடும் மதி அங்காடி (எக்ஸ்பிரஸ்) என்ற பெயரில் வாகன அங்காடி அமைத்து மாற்றுத்திறனாளிகள் மற்றும் நலிவுற்றோர்களுக்கு வழங்கிட திட்டமிடப்பட்டுள்ளது.

எனவே, நடமாடும் மதி அங்காடி (எக்ஸ்பிரஸ்) அங்காடியினை இயக்குவதற்கும், பொருட்கள் உற்பத்தி மற்றும் விற்பனையில் ஆர்வமும், முன் அனுபவமும், சுயஉதவிக்குழுவில் ஒரு ஆண்டுக்கு மேல் உள்ள மாற்றுத்திறனாளிகள், ஒற்றைப்பெற்றோர் ஆகியோர்கள் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பங்கள்

திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த விண்ணப்பதாரர் சுயஉதவிக்குழு, ஊராட்சி அளவிலான கூட்டமைப்புகளில் வராக்கடன் ஏதுமில்லை என்ற சான்றிதழ் பெற்று விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பங்கள் தொடர்புடைய வட்டார இயக்க மேலாண்மை அலகில் வழங்கப்படுகிறது.

அங்கு விண்ணப்பங்களை பெற்று 31-ந் தேதிக்குள் திருவாரூர் மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சிதுறை ஒருங்கிணைந்த கட்டிடத்தில் தரைதளத்தில் இயங்கிவரும் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், மாவட்ட இயக்க மேலாண்மை அலகில் சமர்ப்பித்திட வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story