மாற்றுத்திறனாளி வாலிபர் திடீர் தர்ணா


மாற்றுத்திறனாளி வாலிபர் திடீர் தர்ணா
x

பழனி முருகன் கோவில் அலுவலகம் முன்பு மாற்றுத்திறனாளி வாலிபர் திடீர் தர்ணாவில் ஈடுபட்டனர்.

திண்டுக்கல்

பழனியை அடுத்த பழைய ஆயக்குடியை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 21). நேற்று இவர், பழனி அடிவாரத்தில் உள்ள முருகன் கோவில் தலைமை அலுவலகத்துக்கு வந்தார். பின்னர் திடீரென அலுவலகம் முன்பு அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டார். அப்போது மாற்றுத்திறனாளியான நான் பட்டப்படிப்பு முடித்துள்ளேன். ஆனால் பல்வேறு தனியார் நிறுவனங்களில் தேடியும் வேலை எதுவும் கிடைக்கவில்லை, எனவே பழனி முருகன் கோவிலில் வேலை வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். இதையடுத்து கோவில் அதிகாரிகள் வந்து அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதைத்தொடர்ந்து மணிகண்டன் அங்கிருந்து சென்றார். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story