தங்க கொலுசு போலீசில் ஒப்படைப்பு


தங்க கொலுசு போலீசில் ஒப்படைப்பு
x
தினத்தந்தி 2 Aug 2023 12:15 AM IST (Updated: 2 Aug 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

மண்டைக்காடு கோவில் வளாகத்தில் கிடந்த தங்க கொலுசு போலீசில் ஒப்படைக்கப்பட்டது.

கன்னியாகுமரி

மணவாளக்குறிச்சி:

மண்டைக்காடு கோவில் வளாகத்தில் கிடந்த தங்க கொலுசு போலீசில் ஒப்படைக்கப்பட்டது.

நாகர்கோவில் அருகே பட்டகசாலியன்விளையை சேர்ந்தவர் சந்திரசேகர் (வயது 57). இவர் செட்டிகுளம் பகுதியில் மரம் அறுக்கும் ஆலை நடத்தி வருகிறார். இவர் ஆடி செவ்வாய்க்கிழமையையொட்டி நேற்று காலை மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலுக்கு குடும்பத்துடன் வந்தார்.

அவர் குடும்பத்தினருடன் கோவில் பிரகாரத்தை சுற்றி வரும்போது, விநாயகர் சன்னதி அருகில் ஒரு பவுன் தங்க கொலுசு ஒன்று மட்டும் கிடந்ததை கண்டெடுத்தார். உடனே அவர் மண்டைக்காடு போலீசில் ஒப்படைத்தார். அவரது நேர்மையை போலீசார் பாராட்டினர். கோவில் வளாகத்தில் தங்க கொலுசை தவற விட்டவர்கள் உரிய அடையாளம் கூறி பெற்று கொள்ளலாம் என போலீசார் அறிவித்து உள்ளனர்.


Next Story