பஸ்சில் தவறவிட்ட செல்போன் உரியவரிடம் ஒப்படைப்பு


பஸ்சில் தவறவிட்ட செல்போன் உரியவரிடம் ஒப்படைப்பு
x

நாகர்கோவிலில் பஸ்சில் தவறவிட்ட செல்போன் உரியவரிடம் ஒப்படைப்பு

கன்னியாகுமரி

நாகர்கோவில்,

நாகர்கோவில் செட்டிகுளம் பணிமனையைச் சேர்ந்த பஸ் ஒன்று நேற்று முன்தினம் இரவு திங்கள்சந்தையில் இருந்து நாகர்கோவிலுக்கு வந்தது. அந்த பஸ்சில் பயணம் செய்த திருச்செந்தூரைச் சேர்ந்த பூ வியாபாரி சக்திவேல் தனது செல்போனை தவறவிட்டார். இதுதொடர்பாக அவர் இரவு வடசேரி பஸ் நிலையத்தில் உள்ள அரசு போக்குவரத்துக்கழக அதிகாரிகளிடம் புகார் செய்தார்.

இந்தநிலையில் அந்த செல்போன் பஸ்சுக்குள் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதை கண்டெடுத்த பஸ்சின் டிரைவர், கண்டக்டர் போக்குவரத்துக்கழக அலுவலகத்தில் ஒப்படைத்தனர். இதையடுத்து அரசு போக்குவரத்துக்கழக துணை மேலாளர் (வணிகம்) ஜெரோலின் லிஸ்பன் சிங், சக்திவேலை வரவழைத்து அவருடைய செல்போனை ஒப்படைத்தார். அதனை பெற்றுக்கொண்ட அவர் அதிகாரிகளுக்கும், டிரைவர், கண்டக்டருக்கும் நன்றி தெரிவித்தார்.


Next Story