தவற விட்ட செல்போன் உரியவரிடம் ஒப்படைப்பு
தவற விட்ட செல்போன் உரியவரிடம் ஒப்படைப்பு
நீலகிரி
பந்தலூர்
கேரள மாநிலம் வயநாடு மாவட்டம் மேப்பாடியை சேர்ந்தவர் சல்மான் பாரீஸ். இவர் பந்தலூருக்கு வந்துவிட்டு தனது மோட்டார் சைக்கிளில் மேப்பாடியை நோக்கி சென்று கொண்டு இருந்தார். அப்போது அவரது செல்போன் தவறி விழுந்தது. இதை அறியாமல் அவர் தனது வீட்டுக்கு சென்றுவிட்டார். இதையடுத்து அந்த வழியாக சென்ற கொளப்பள்ளியை சேர்ந்த ஆசிரியர் சிவா, அந்த செல்போனை கண்டெடுத்து சேரம்பாடி சப்-இன்ஸ்பெக்டர் தினேஷ்குமாரிடம் ஒப்படைத்தார். தொடர்ந்து செல்போனை உரியவரிடம் போலீசார் ஒப்படைத்தனர். மேலும் அதை கண்டெடுத்து வழங்கிய ஆசிரியரை பலரும் பாராட்டினர்.
Related Tags :
Next Story