ஓட்டலில் தவற விட்ட தங்க சங்கிலி உரியவரிடம் ஒப்படைப்பு
திங்கள்சந்தையில் ஓட்டலில் தவற விட்ட தங்க சங்கிலி உரியவரிடம் ஒப்படைப்பு
திங்கள்சந்தை,
இரணியல் அருகே உள்ள திக்கணங்கோடு தாறாவிளையை சேர்ந்தவர் சிவராம் (வயது34), ஆட்டோ டிரைவர். இவர் நேற்று முன்தினம் தனது மனைவி மற்றும் குழந்தையுடன் நாகர்கோவிலுக்கு புறபட்டார். செல்லும் வழியில் அவர்கள் திங்கள்சந்தையில் ஒரு ஓட்டலில் மதிய உணவு சாப்பிட்டனர். அப்ேபாது சிவராமுக்கு சொந்தமான ஒரு பவுன் தங்க சங்கிலி ஓட்டலில் தவறியது. இதை சிவராம் கவனிக்காமல் ெசன்றுவிட்டார்.
சிறிது நேரம் கடந்து ஓட்டலில் தங்க சங்கிலி கிடப்பதை உரிமையாளர் ராமமூர்த்தி (53) கண்டார். அவர் நகையை மீட்டு இரணியல் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தார்.
இந்தநிலையில் வீட்டுக்கு சென்ற சிவராம் தங்க சங்கிலிைய காணாமல் அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து அவர் இரணியல் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்க சென்றார். போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்வேல்குமார் விசாரணை நடத்தி தங்க நகையை சிவராமிடம் ஒப்படைத்தார். மேலும், நகையை நேர்மையுடன் ஒப்படைத்த ஓட்டல் உரிமையாளர் ராமமூர்த்தியை போலீசார் பாராட்டினர்.