ராமநாதபுரத்தில் கைத்தறி கண்காட்சி
ராமநாதபுரத்தில் கைத்தறி கண்காட்சியை கலெக்டர் தொடங்கி வைத்தார்.
மத்திய ஜவுளித்துறை, தமிழக கைத்தறி துறை சார்பில் மாவட்ட அளவிலான கைத்தறி துணிகள் விற்பனை கண்காட்சி ராமநாதபுரம் ஹாஜா மஹாலில் நடைபெறுகிறது. இதனை கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். கண்காட்சி அரங்குகளை பார்வையிட்டு முதல் விற்பனையை தொடங்கி வைத்தார். அப்போது கலெக்டர் கூறியதாவது:-
மாநில அளவில் நெசவாளர்கள் உற்பத்தி செய்யும் கைத்தறி துணிகளின் கண்காட்சி நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி ராமநாதபுரத்தில் 6-வது முறையாக கண்காட்சி வருகிற 28-ந்தேதி வரை நடைபெறுகிறது. நெசவாளர்களின் வாழ்வாதாரம் மேம்பட கைத்தறி ஆடைகளை அனைவரும் பயன்படுத்த வேண்டும். இந்த கண்காட்சியில் 25 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு பருத்தி, பட்டு ரகங்களுக்கு தள்ளுபடி வழங்குகிறது. இவ்வாறு அவர் கூறினார். இந்த நிகழ்ச்சியில் கூடுதல் கலெக்டர் பிரவீன் குமார், உதவி கலெக்டர் (பயிற்சி) நாராயண சர்மா உள்பட பலர் கலந்து கொண்டனர்.