ஆதரவின்றி சுற்றித்திரிந்த 8 பேர் முதியோர் இல்லத்தில் ஒப்படைப்பு
குடும்ப பிரச்சினை அல்லது முதியோர்களை குடும்பத்தினரே பராமரிக்காமல் விட்டுவிட்டால் அவர்கள் வீட்டை விட்டு வெளியேறி கோவில்கள், பஸ் நிலையங்கள், ரெயில் நிலையங்கள் போன்ற இடங்களில் பிச்சை எடுத்து தங்களுடைய வாழ்வாதாரத்தை பார்த்துக் கொள்கின்றனர். அவ்வாறு காட்பாடி ரெயில் நிலையத்தில் ஆதரவின்றி பிச்சை எடுத்து வாழ்ந்து வருபவர்களை காட்பாடி ரெயில்வே போலீசார் பார்த்தனர். அவர்களின் எதிர்கால நலனை கருத்தில் கொண்டு ரெயில் நிலையத்தில் ஆதரவின்றி சுற்றித்திரிந்த விரிஞ்சிபுரத்தை சேர்ந்த குப்பம்மாள், செய்யாறு கருப்புசாமி, சங்கராபுரம் ராஜேந்திரன், ஆரணி மீனா, ஜெயங்கொண்டம் மணிகண்டன், காஞ்சீபுரம் ரேகா, செங்கல்பட்டு பொன்னம்மாள், ஆலங்காயம் சரஸ்வதி ஆகிய 8 பேரை நேற்று மீட்டனர்.
பின்னர் அவர்கள் 8 பேரையும் வேலூரில் உள்ள முதியோர் இல்லத்தில் ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் சித்ரா முன்னிலையில் ரெயில்வே போலீசார் ஒப்படைத்தனர்.