தூக்குபோட்டு பெண் தற்கொலை


தூக்குபோட்டு பெண் தற்கொலை
x

குடும்பத் தகராறு காரணமாக தூக்குபோட்டு பெண் தற்கொலை செய்து கொண்டார்.

திருவண்ணாமலை

திருவண்ணாமலை ஆடையூர் காலனி காஞ்சி ரோடு பகுதியை சேர்ந்தவர் மதன், ஆட்டோ டிரைவர்.

இவரது மனைவி சுமித்திரா (வயது 28). இவர்களுக்கு திருமணமாகி 3 ஆண்டுகள் ஆகிறது. அனன்யா என்ற 2 வயதில் பெண் குழந்தை உள்ளது.

கணவன்- மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் மீண்டும் அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது.

இதனால் மனமுடைந்த சுமித்திரா நள்ளிரவில் வீட்டில் தூக்கில் தொங்கினார். மயங்கிய நிலையில் கிடந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.

ஆனால் அவர் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்த புகாரின் பேரில் திருவண்ணாமலை தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் சுமித்திராவிற்கு திருமணமாகி 3 ஆண்டுகள் ஆவதால் இந்த சம்பவம் குறித்து திருவண்ணாமலை உதவி கலெக்டர் மந்தாகினி விசாரணை நடத்தி வருகிறார்.


Next Story