காவலாளியை கொலை செய்த வழக்கில் இறைச்சி கடைக்காரருக்கு ஆயுள் தண்டனை


காவலாளியை கொலை செய்த வழக்கில் இறைச்சி கடைக்காரருக்கு ஆயுள் தண்டனை
x

பல்லடம் அருகே தலையை துண்டித்து காவலாளியை கொலை செய்த வழக்கில் இறைச்சி கடைக்காரருக்கு ஆயுள் தண்டனை விதித்து திருப்பூர் கோர்ட்டில் தீர்ப்பளிக்கப்பட்டது.

திருப்பூர்

பல்லடம் அருகே தலையை துண்டித்து காவலாளியை கொலை செய்த வழக்கில் இறைச்சி கடைக்காரருக்கு ஆயுள் தண்டனை விதித்து திருப்பூர் கோர்ட்டில் தீர்ப்பளிக்கப்பட்டது.பல்லடம் அருகே தலையை துண்டித்து காவலாளியை கொலை செய்த வழக்கில் இறைச்சி கடைக்காரருக்கு ஆயுள் தண்டனை விதித்து திருப்பூர் கோர்ட்டில் தீர்ப்பளிக்கப்பட்டது.

தலை துண்டித்து கொலை

பல்லடம் கள்ளக்கிணறு பகுதியை சேர்ந்தவர் கலைமணி (வயது 41). இவர் அந்தப்பகுதியில் உள்ள தோட்டத்தில் காவலாளியாக வேலை பார்த்து வந்தார்.

பல்லடம் காளிபாளையத்தில் இறைச்சிக்கடை வைத்திருந்தவர் செந்தில்குமார் (42). இவரது சொந்த ஊர் சேலம் மாவட்டம் மேட்டூர் குரும்பனூர் ஆகும்.

கலைமணியும், செந்தில்குமாரும் நண்பர்கள். இருவரும் சேர்ந்து மது அருந்துவது வழக்கம். இந்த நிலையில் கடந்த 15-11-2014 அன்று இரவு செந்தில்குமார் கள்ளக்கிணறில் உள்ள கலைமணியின் தோட்டத்துக்கு சென்றுள்ளார். பின்னர் அங்கு இருவரும் மது அருந்தி அசைவ உணவு சாப்பிட்டுள்ளனர். அப்போது கலைமணி, செந்தில்குமாரின் முதல் மனைவியை பற்றி தவறாக பேசியுள்ளார். இதனால் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் கோபமடைந்த செந்தில்குமார், வெட்டுக்கத்தியால் கலைமணியின் தலையை துண்டாக அறுத்து கொலை செய்தார்.

பி.ஏ.பி. வாய்க்காலில் உடல் வீச்சு

பின்னர் உடலை மோட்டார் சைக்கிளில் ஏற்றிச்சென்று பி.ஏ.பி. வாய்க்காலில் சென்ற தண்ணீரில் வீசி விட்டு சென்று விட்டார். கலைமணியின் செல்போனையும் செந்தில்குமார் எடுத்துச்சென்றார். மறுநாள், அவினாசிபாளையம் போலீஸ் நிலையத்துக்கு உட்பட்ட பகுதியில் பி.ஏ.பி. வாய்க்காலில் கிடந்த தலையில்லாத உடலை மீட்டு போலீசார் விசாரித்தனர்.

அதன் பிறகே கொலையானது கலைமணி என்பது தெரியவந்தது. கொலை நடந்த இடம் பல்லடம் போலீஸ் நிலையத்துக்கு உட்பட்ட பகுதி என்பதால் பல்லடம் போலீசார் விசாரணை நடத்தி செந்தில்குமாரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

ஆயுள் தண்டனை

இது குறித்த வழக்கு விசாரணை திருப்பூர் முதலாவது கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் நடந்து வந்தது. நேற்று இந்த வழக்கில் தீர்ப்பளிக்கப்பட்டது. கொலை குற்றத்துக்காக செந்தில்குமாருக்கு ஆயுள் தண்டனை, ரூ.5 ஆயிரம் அபராதம், தடயத்தை மறைத்த குற்றத்துக்காக 7 ஆண்டு சிறை தண்டனை, ரூ.1000 அபராதம் விதித்து தண்டனையை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என்று நீதிபதி பத்மா தீர்ப்பளித்தார். இந்த வழக்கில் சிறப்பு அரசு வக்கீல் விவேகானந்தம் ஆஜராகி வாதாடினார்.


Related Tags :
Next Story