தூக்குப்போட்டு தொழிலாளி தற்கொலை


தூக்குப்போட்டு தொழிலாளி தற்கொலை
x

தூக்குப்போட்டு தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.

விருதுநகர்


விருதுநகர் அகமதுநகர் 3-வது தெருவை சேர்ந்தவர் மீரா உசேன் (வயது 65). இவர் பாலவநத்தம் ஓட்டலில் வேலை செய்து வந்தார். மீரா உசேன் தனது மகன் திருமண செலவுக்காக தனது மனைவி மும்தாஜ் பேகத்திடம் கொடுத்த பணத்தை திருப்பி கேட்டதால் மீரா உசேனுக்கும், அவரது மகன் ஆஷிக் உமருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் மீராஉசேன் கோபித்துக் கொண்டு அப்பகுதியில் உள்ள தனது தாயார் வீட்டுக்கு சென்று விட்டார். அங்கு அவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இதுபற்றி மும்தாஜ் பேகம் கொடுத்த புகாரின் பேரில் இந்நகர் மேற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.


Next Story