தூக்குப்போட்டு தொழிலாளி தற்கொலை


தூக்குப்போட்டு தொழிலாளி தற்கொலை
x

விருதுநகரில் தூக்குப்போட்டு தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.

விருதுநகர்

விருதுநகர் முத்தால் நகரை சேர்ந்தவர் வீரபாண்டி (வயது 45). தையல் தொழில் செய்து வந்த இவருக்கு ரேணுகாதேவி என்ற மனைவியும், பிரியா என்ற மகளும் உள்ளனர். இந்நிலையில் வீரபாண்டிக்கு கடன் பிரச்சினை இருந்ததால், ரேணுகா தேவி இவரை விட்டு பிரிந்து சென்று விட்டதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த வீரபாண்டி, தனது சகோதரர் செந்தில்குமார் (37) என்பவரை அழைத்து தனக்கு கடன் பிரச்சினை இருப்பதாகவும், தன் மனைவி ரேணுகாதேவியிடம் கடனை எப்படியாவது அடைத்து விடுவேன் என்று சொல்லியும் மனைவி பிரிந்து சென்று விட்டார் என தெரிவித்துள்ளார். இந்நிலையில் நேற்று திடீரென வீரபாண்டி, செல்போன் தகவலில் சென்று வருகிறேன் என்று தகவல் அனுப்பி உள்ளார். இதனைதொடர்ந்து செந்தில்குமார் தனது மனைவியுடன் வீரபாண்டி வீட்டுக்கு சென்று பார்த்த போது வீரபாண்டி வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து செந்தில்குமார் கொடுத்த புகாரின் பேரில் பாண்டியன் நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.



Next Story