தூக்குப்போட்டு தொழிலாளி தற்கொலை
திருக்கோவிலூர் அருகே தூக்குப்போட்டு தொழிலாளி தற்கொலை
திருக்கோவிலூர்
திருக்கோவிலூர் அருகே உள்ள அரும்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் தேவேந்திரன்(வயது 42). விவசாய தொழிலாளியான இவர் சம்பவத்தன்று மது குடித்துவிட்டு வீட்டிற்கு வந்தபோது இவருக்கும், அவரது மனைவி சுகுணாவுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. சில நிமிடங்களுக்கு பிறகு கதவை தாழ்பாழ் போட்டுக்கொண்ட தேவேந்திரன் வீட்டின் உள்ளே தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
வீட்டின் வெளியே சென்று விட்டு திரும்பி வந்த சுகுணா ஜன்னல் வழியாக பார்த்தபோது தேவேந்திரன் தூக்கில் பிணமாக தொங்கியதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து தகவல் அறிந்து வந்த திருக்கோவிலூர் போலீசார் தேவேந்திரனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருக்கோவிலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து தேவேந்திரனின் சாவுக்கான காரணம் என்ன? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.