தூக்குப்போட்டு தொழிலாளி தற்கொலை
கள்ளக்குறிச்சி அருகே தூக்குப்போட்டு தொழிலாளி தற்கொலை
கள்ளக்குறிச்சி
கள்ளக்குறிச்சி கவரத்திரையைச் சேர்ந்தவர் கோபி(வயது45) தொழிலாளி. திருமணம் ஆகாத இவர் மதுகுடிக்கும் பழக்கம் உடையவர் என்பதால் கடந்த 15 ஆண்டுகளாக வீட்டுக்கு செல்லாமல் கூலி வேலை செய்து சாப்பிட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் காலை கள்ளக்குறிச்சி அருகே சோமண்டார்குடியில் உள்ள தடிகாரசாமி கோவில் அருகில் உள்ள மரத்தில் தூக்கில் கோபி பிணமாக தொங்கிக்கொண்டிருந்தார். இது பற்றி தகவல் அறிந்த கள்ளக்குறிச்சி போலீசார் விரைந்து சென்று கோபியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இது குறித்த புகாரின் பேரில் கள்ளக்குறிச்சி போலீசார் வழக்குப் பதிவு செய்து கோபியின் சாவுக்கான காரணம் என்ன? என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.