தூக்குப்போட்டு தொழிலாளி தற்கொலை
தூக்குப்போட்டு தொழிலாளி தற்கொலை
தஞ்சாவூர்
திருவையாறை அடுத்த நாகத்தி மாதாகோவில் தெருவை சேர்ந்தவர் இன்பசேகரன் (வயது39). கூலித்தொழிலாளி. இவரது மனைவி ஹேமலதா. இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். கணவன்-மனைவி இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டது. இதனால் மனமுடைந்த இன்பசேகரன் நேற்றுமுன்தினம் வீட்டில் சேலையில் தூக்குப்போட்டு கொண்டார். இதனை பார்த்த அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு உடனடியாக திருவையாறு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர் இன்பசேகரன் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தார். இதுகுறித்து இன்பசேகரன் தாயார் சவரியம்மாள் (67) நடுக்காவேரி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் நடுக்காவேரி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வேலாயுதம் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Related Tags :
Next Story