தூக்குப்போட்டு தொழிலாளி தற்கொலை


தூக்குப்போட்டு தொழிலாளி தற்கொலை
x
தினத்தந்தி 14 Feb 2023 12:30 AM IST (Updated: 14 Feb 2023 12:31 AM IST)
t-max-icont-min-icon

கடமலைக்குண்டு அருகே தூக்குப்போட்டு தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.

தேனி

கடமலைக்குண்டு அருகே மேலப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் ஆனந்தன் (வயது 36). மரத்தச்சு வேலை செய்து வந்தார். இவரது மனைவி பால்மணி. இவர்களுக்கு பிரவீன்குமார், கிருஷ்ணகுமார் ஆகிய 2 மகன்கள் உள்ளனர். ஆனந்தன் கடந்த சில மாதங்களாக குடிப்பழக்கத்திற்கு அடிமையானதாக கூறப்படுகிறது. இதனால் கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு ஏற்பட்ட தகராறுக்கு பின்பு ஆனந்தன் வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்துள்ளார். இந்தநிலையில் நேற்று வீட்டில் யாரும் இல்லாத போது ஆனந்தன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்த கடமலைக்குண்டு போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று ஆனந்தனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Related Tags :
Next Story