தூக்குப்போட்டு தொழிலாளி தற்கொலை


தூக்குப்போட்டு தொழிலாளி தற்கொலை
x

தூக்குப்போட்டு தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.

விருதுநகர்

அருப்புக்கோட்டை,

அருப்புக்கோட்டை திருநகரம் வடக்கு ரத்தினசபாபதிபுரம் தெருவை சேர்ந்தவர் சரவணன் (வயது 33). இவரது மனைவி முத்துமயில். இவர்கள் நெசவு தொழில் செய்து வந்தனர். இவர்களுக்கு 4 வயதில் ஆண் குழந்தை உள்ளது. இந்நிலையில் மனைவி முத்துமயில், கணவருடன் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக கோபித்துக் கொண்டு அவரது அப்பா வீட்டிற்கு சென்று விட்டதாக கூறப்படுகிறது. இதனால் மன வேதனையில் இருந்த சரவணன் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த டவுன் போலீசார் அவரது உடலை கைப்பற்றி அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.



Next Story