தூக்குப்போட்டு வியாபாரி தற்கொலை
தூக்குப்போட்டு வியாபாரி தற்கொலை செய்து கொண்டார்.
கீரனூர் அருகே அய்யப்பா நகரை சேர்ந்தவர் கண்ணன் (வயது 50). விறகு வியாபாரி. இவர் கடன் தொல்லையால் மனமுடைந்த நிலையில் இருந்து வந்தார். இந்நிலையில் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலைக்கு முயன்றார். இதையடுத்து அவரை அருகில் உள்ளவர்கள் மீட்டு சிகிச்சைக்காக கீரனூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் கண்ணன் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து கண்ணனின் மனைவி லெட்சுமி கொடுத்த புகாரின் பேரில், கீரனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire