கல்லக்குடி லட்சுமிநகர் சந்தோஷ ஆஞ்சநேயர் கோவிலில் அனுமன்ஜெயந்தி விழா


கல்லக்குடி லட்சுமிநகர் சந்தோஷ ஆஞ்சநேயர் கோவிலில் அனுமன்ஜெயந்தி விழா
x

கல்லக்குடி லட்சுமிநகர் சந்தோஷ ஆஞ்சநேயர் கோவிலில் அனுமன்ஜெயந்தி விழா நடைபெற்றது.

திருச்சி

கல்லக்குடி லட்சுமிநகரில் உள்ள சந்தோஷ ஆஞ்சநேயர் கோவிலில் அனுமன்ஜெயந்தி விழா நடைபெற்றது. இதையொட்டி சந்தோஷ ஆஞ்சநேயருக்கு சிறப்புஅபிஷேகம் செய்து தீபாராதனை காண்பிக்கப்பட்டது. தொடர்ந்து 96 வகை திரவியங்களை கொண்டு மஹாசுதர்சன ஹோமம், லெட்சுமிநரசிம்மர் ஹோமமும், நவக்கிரகஹோமமும், மாலையில் மகாஅபிஷேகமும் நடைபெற்றது. அதன்பின் வெண்ணெய் காப்பு அலங்காரத்தில் ஆஞ்சநேயர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பக்தர்களுக்கு தீர்த்த பிரசாதமும், அன்னதானமும் வழங்கப்பட்டது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் பாலசுப்பரமணியன், கிருபாகரன் ஆகியோர் செய்திருந்தனர். இதேபோல் புள்ளம்பாடி சகாயமாதா பஸ் நிலையம் அருகே உள்ள ஜெயவீர ஆஞ்சநேயர் கோவிலில் சிறப்பு அலங்காரத்துடன் அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது.தொடர்ந்து அன்னதானம் வழங்கப்பட்டது.


Next Story