விவசாயிகள் மகிழ்ச்சி


விவசாயிகள் மகிழ்ச்சி
x

கொள்ளிடம் ஆற்றின் கரையோர கிராமங்களில் பலத்த மழை பெய்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

தஞ்சாவூர்

கொள்ளிடம் ஆற்றின் கரையோர கிராமங்களில் கடந்த சில நாட்களாக கடுமையான வெயில் சுட்டெரித்து வந்தது. இதனால் கிராம மக்கள் மிகவும் அவதியடைந்து வந்தனர். நேற்று மாலை கொள்ளிடம் ஆற்றின் தென் கரையோர கிராமங்களில் கனமழை கொட்டி தீர்த்தது. கணபதி அக்ரகாரம், பெருமாள் கோவில், உள்ளிக்கடை, பட்டுக்குடி, கூடலூர், புத்தூர் உள்ளிட்ட கிராமங்களில் பலத்த காற்றுடன் மழை வெளுத்து வாங்கியது. இதனால் குளிர்ந்த சூழல் நிலவியதால் இப்பகுதி பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். மேட்டூர் அணை நீர் மட்டம் குறைவால் கவலையில் ஆழ்ந்திருந்த இப்பகுதி விவசாயிகள் இந்த மழையால் சற்று ஆறுதல் அடைந்தனர். இந்த மழை வளர்ச்சி பருவத்தில் உள்ள குறுவை நெல் பயிருக்கும், சம்பா நாற்றங்காலுக்கும் பயன் உள்ளதாக இருக்கும் என விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்தனர். இந்த மழையால் இப்பகுதிகளில் செயல்படும் செங்கல் சூளை பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், மீண்டும் பணிகள் தொடங்க சுமார் ஒரு வார காலமாகும் எனவும் செங்கல் உற்பத்தியாளர்கள் கவலை தெரிவித்தனர்.


Next Story