முதல் முறையாக வாக்களித்தது மகிழ்ச்சி;இளம்பெண்கள் பேட்டி


முதல் முறையாக வாக்களித்தது மகிழ்ச்சி;இளம்பெண்கள் பேட்டி
x

ஈரோடு கிழக்கு தொகுதியில் முதல் முறையாக வாக்களித்தது மகிழ்ச்சியாக இருப்பதாக இளம் பெண்கள் கூறினார்கள்.

ஈரோடு

ஈரோடு கிழக்கு தொகுதியில் முதல் முறையாக வாக்களித்தது மகிழ்ச்சியாக இருப்பதாக இளம் பெண்கள் கூறினார்கள்.

இளம் வாக்காளர்கள்

ஈரோடு கிழக்கு தொகுதியில் முதல் முறையாக வாக்களித்த இளம் வாக்காளர்கள் தெரிவித்த கருத்துகள் வருமாறு:-

கருங்கல்பாளையம் ரம்யா:-

எனக்கு கடந்த 3 வாரங்களுக்கு முன்பு தான் வாக்காளர் அடையாள அட்டை கையில் கிடைத்தது. நான் முதல் முறையாக இந்த சட்டமன்ற தேர்தலில் வாக்களித்துள்ளேன். மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.

முன்னதாக நான் வாக்களிப்பதற்காக வரிசையில் நின்றபோது ஒருவிதமான பதற்றம் இருந்தது. பின்னர் வாக்குச்சாவடி மையத்துக்குள் சென்றதும் எப்படி வாக்களிக்க வேண்டும் என்பதுகுறித்து அங்கிருந்த அதிகாரிகள் தெளிவாக கூறினார்கள். அதன்படி நான் வாக்களித்து விட்டு வெளியே வந்தேன். முதல் முறையாக ஜனநாயக கடமை ஆற்றியது மிகவும் பெருமையாக இருக்கிறது.

மகிழ்ச்சி

வீரப்பன்சத்திரம் காவிரி ரோடு பகுதியை சேர்ந்த எம்.பிரியதர்ஷினி (வயது 18):-

நான் பி.டெக் படித்து வருகிறேன். 2024-ம் ஆண்டு நடக்கும் நாடாளுமன்ற தேர்தலில்தான் ஓட்டு போட போகிறேன் என்று ஆர்வமாக இருந்தேன். அதற்குள் எங்கள் தொகுதியில் இடைத்தேர்தல் வந்துவிட்டது. முதல் முறையாக வாக்குச்சாவடிக்கு சென்று வரிசையில் காத்திருந்து எனது வாக்கை பதிவு செய்தேன்.

முதல் முறையாக வாக்களித்தது மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. ஜனநாயக கடமையை ஆற்றிய மனதிருப்தி கிடைத்து இருக்கிறது. ஒரு திருவிழாவைபோல தேர்தல் பிரசாரத்தை காண முடிந்தது. ஓட்டு போடுவது ஒவ்வொருவரின் உரிமை. அந்த உரிமையை விட்டு கொடுக்காமல் அனைவரும் வாக்களிக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.


Related Tags :
Next Story