மாணவிக்கு காதல் கடிதம் கொடுத்து தொல்லை: போக்சோவில் வாலிபர் கைது


மாணவிக்கு காதல் கடிதம் கொடுத்து தொல்லை:  போக்சோவில் வாலிபர் கைது
x
தினத்தந்தி 4 Dec 2022 12:15 AM IST (Updated: 4 Dec 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

மாணவிக்கு காதல் கடிதம் கொடுத்து தொல்லை செய்த வாலிபர் போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டார்.

தேனி

கம்பம் சுப்பிரமணி சுவாமி கோவில் தெருவைச் சேர்ந்தவர் சிபி சூர்யா (வயது 19). இவர், 9-ம் வகுப்பு படிக்கும் மாணவிக்கு காதல் கடிதம் கொடுத்து தொல்லை செய்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து மாணவியின் பெற்றோர் கம்பம் வடக்கு போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து சிபி சூர்யாவை கைது செய்தனர்.


Related Tags :
Next Story