பழங்களை ரசாயன கற்களை கொண்டு பழுக்க வைத்தால் கடும் நடவடிக்கை


பழங்களை ரசாயன கற்களை கொண்டு பழுக்க வைத்தால் கடும் நடவடிக்கை
x

பழங்களை ரசாயன கற்களை கொண்டு பழுக்க வைத்தால் கடும் நடவடிக்கை என்று உணவு பாதுகாப்பு துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

திருவண்ணாமலை


மாம்பழ சீசன் தொடங்கி உள்ளதால் திருவண்ணாமலை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் மாம்பழம் விற்பனை செய்யப்படுகிறது.

இந்த நிலையில் இன்று திருவண்ணாமலை மாவட்ட உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் டாக்டர் ராமகிருஷ்ணன் உத்தரவின்படி திருவண்ணாமலைநகரில் கடைவீதி மற்றும் பழ மண்டிகளில் ரசாயன கற்களை வைத்து வாழைப் பழங்கள், மாம்பழங்கள் பழுக்கவைக்கப்பட்டு உள்ளதா என்று நகர உணவு பாதுகாப்பு அதிகாரி எழில்சிக்கயராஜா மற்றும் அலுவலர்கள் திடீர் ஆய்வில் ஈடுபட்டனர்.

அப்போது அவர்கள் சாலையோரம் உள்ள பழக்கடைகள், பழ மண்டி, குடோன்களில் நேரில் சென்று ஆய்வு செய்தனர்.

ஆய்வின் போது மாம்பழங்களை செயற்கை முறையில் ரசாயன (கார்பைட்) கற்கள் மற்றும் எத்திலின் ரசாயன கரைசலை கொண்டு பழுக்க வைத்தால் உணவு பாதுகாப்பு தர நிர்ணய சட்டத்தின்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

மேலும் இதுகுறித்து தொடர்ந்து அவ்வப்போது ஆய்வு செய்யப்படும் என்று உணவு பாதுகாப்பு துறை அலுவலர்கள் எச்சரிக்கை விடுத்தனர்.


Next Story