மிளகு விவசாயிகளுக்கு அறுவடை செய்யும் ஏணி
சேலம் சந்தியூர் வேளாண்மை அறிவியல் நிலையத்தில் ஏற்காடு மலைவாழ் மக்களுக்கான மிளகு மற்றும் சிறுதானிய பயிர்கள் சாகுபடியில் நவீன தொழில் நுட்பங்கள் பற்றிய பயிற்சி நடந்தது. பயிற்சியில் மிளகு சாகுபடி முறைகள், பூச்சி நோய் மேலாண்மை முறைகள், மதிப்பு கூடுதல் தொழில்நுட்பங்கள், சிறுதானியங்களில் இயற்கை வேளாண்மை முறைகள், அதில் மதிப்பு கூடுதல் தொழில்நுட்பங்கள் ஆகியன குறித்து விளக்கம் அளிக்கப்பட்டன. மேலும் குழுவாக இணைந்து மலைவாழ் மக்கள் சாகுபடி செய்த வேளாண் பொருட்களை சந்தைப்படுத்தும் முறைகள் பற்றியும் விவாதிக்கப்பட்டது.
சுற்றுலா மையமான ஏற்காட்டில் வேளாண் விளைபொருட்களான மிளகு, காபி, காய்கறிகள் மற்றும் சத்துமிக்க சிறுதானியங்கள் ஆகியவற்றினை சுற்றுலா வரும் மக்களிடையே மட்டும் அல்லாமல் குழுவாக ஆன்லைனிலும் விற்கப்படும் சந்தை வாய்ப்புகள் பற்றி விளக்கப்பட்டன. மிளகு அறுவடை செய்வதற்கு ஏதுவாக மலைவாழ் மக்களுக்கான திட்டத்தின் கீழ் மிளகு அறுவடை செய்யும் ஏணி மிளகு விவசாயிகள் 20 பேருக்கு சந்தியூர் வேளாண்மை அறிவியல் நிலையத்தால் வழங்கப்பட்டது. ஏற்காடு தோட்டக்கலை ஆராய்ச்சி நிலைய தலைவர் சத்தியமூர்த்தி, பூச்சியியல் இணை பேராசிரியர் செந்தில்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை சந்தியூர் வேளாண்மை அறிவியல் நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளர் ஜெகதாம்பாள், தோட்டக்கலை இணை பேராசிரியர் மாலதி ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தனர்