மதத்தின் பெயரில் நடக்கும் வெறுப்பு அரசியலை முறியடிக்க வேண்டும்


மதத்தின் பெயரில் நடக்கும் வெறுப்பு அரசியலை முறியடிக்க வேண்டும்
x
தினத்தந்தி 19 Dec 2022 12:15 AM IST (Updated: 19 Dec 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

மதத்தின் பெயரில் நடக்கும் வெறுப்பு அரசியலை முறியடிக்க வேண்டும் என்று நாகர்கோவிலில் நடந்த வள்ளலார் முப்பெரும் விழாவில் அமைச்சர் மனோ தங்கராஜ் கூறினார்.

கன்னியாகுமரி

நாகர்கோவில்:

மதத்தின் பெயரில் நடக்கும் வெறுப்பு அரசியலை முறியடிக்க வேண்டும் என்று நாகர்கோவிலில் நடந்த வள்ளலார் முப்பெரும் விழாவில் அமைச்சர் மனோ தங்கராஜ் கூறினார்.

வள்ளலார் முப்பெரும் விழா

தமிழகம் முழுவதும் அறநிலையத்துறை சார்பில் வள்ளலார் முப்பெரும் விழா கொண்டாடப்படுகிறது. இதன் ஒரு கட்டமாக குமரி மாவட்ட அறநிலையத்துறை சார்பில் நாகர்கோவிலில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் நேற்று வள்ளலார் முப்பெரும் விழா நடந்தது. இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் கவிதா பிரியதர்ஷினி தலைமை தாங்கினார். வள்ளலார் பேரவை தலைவர் பத்மேந்திரா முன்னிலை வகித்தார்.

நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் பங்கேற்று பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

சமயங்கள், மதங்களின் அடிப்படையில் மக்களை அடிமைப்படுத்தி ஒரு கூட்டம் வளர்ந்து வந்தது. அதை எதிர்த்தவர் வள்ளலார். ஆனால் இன்றைய உலகில் பொறாமையும், பகைமையும் வளர்ந்து வருகிறது. கடவுளையும், இயற்கையையும் நேசிக்க வேண்டும். ஆனால் இப்போது கடவுளின் பெயரால் இயற்கையை அழிக்கிறோம்.

வெறுப்பு அரசியல்

அனைத்து மதங்களும், சமயங்களும் அன்பையும், நீதியையும் தான் போற்றுகின்றன. அனைவரும் சமம். அன்பு ஒன்று தான் இந்த உலகில் நிலையானது. வள்ளலார் கூறிய பல சித்தாந்தங்கள் இப்போது மிகவும் அவசியமாகிறது. அமைதியும், நீதியும்தான் மக்களை நல்வழிப்படுத்தும். தற்போது சிலர் மக்கள் மத்தியில் வெறுப்பு பிரசாரத்தை மேற் கொண்டு வருகிறார்கள். குமரி மாவட்டத்தில் பரவி வரும் இந்த வெறுப்பு பிரசாரத்தை முறியடிக்க வேண்டும். நமது நாட்டில் மதத்தின் பெயரால் வெறுப்பு அரசியல் செய்ய நினைப்பவர்களின் முயற்சியை நாம் ஒன்றிணைந்து முறியடிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார். ெதாடர்ந்து அவர் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசு வழங்கினார்.

விழாவில் கலெக்டர் அரவிந்த், மாநகராட்சி மேயர் மகேஷ், அருட்பெருஞ்ஜோதி அகல் விளக்கு மன்ற தலைவர் சவுந்தர்ராஜன், வடலூர் வள்ளலார் உலக மய தலைவர் சூரியமூர்த்தி, அறநிலையத்துறை உதவி ஆணையர் தங்கம், அறநிலையத்துறை பொறியாளர் ராஜ்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story