தூத்துக்குடியில் மோட்டார் சைக்கிளில் வந்துவாலிபரிடம்செல்போன் பறித்த 3 பேர் சிக்கினர்
மோட்டார் சைக்கிளில் வந்துவாலிபரிடம்செல்போன் பறித்த 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
தூத்துக்குடியில் மோட்டார் சைக்கிளில் வந்து வாலிபரை வழிமறித்து மிரட்டி செல்போனை பறித்து சென்ற 3பேரை போலீசார் கைது செய்தனர்.
வாலிபரிடம் செல்போன் பறிப்பு
தூத்துக்குடி கே.வி.கே நகரை சேர்ந்தவர் பெருமாள். இவருடைய மகன் ஏகாம்பரநாதன் (வயது 21). இவர் கடந்த 16-ந் தேதி தூத்துக்குடி வி.எம்.எஸ் நகர் அருகே நடந்து சென்று கொண்டிருந்தபோது மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் ஏகாம்பரநாதனை வழிமறித்துள்ளனர். பின்னர் அவரை மிரட்டி செல்போனை பறித்துக்கொண்டு மோட்டார் சைக்கிளில் தப்பி சென்று விட்டனர்.
இது குறித்த புகாரின் பேரில் சிப்காட் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், தூத்துக்குடி விஸ்வாபுரத்தைச் சேர்ந்த நாகராஜ் மகன் மாதவன் (21), தூத்துக்குடி தேவர் காலனியை சேர்ந்த வீரபாண்டி மகன் இன்பராஜ் (20) மற்றும் ஒரு இளம்சிறார் ஆகியோர் வாலிபரிடம் செல்போனை பறித்து சென்றது தெரியவந்தது.
3 பேர் கைது
இதனை தொடர்ந்து சிப்காட் போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முகம் தலைமையிலான போலீசார் செல்போன் பறிப்பில் ஈடுபட்ட மாதவன், இன்பராஜ் உள்ளிட்ட 3 பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து திருடப்பட்ட செல்போனையும் போலீசார் மீட்டனர்.