காதலியை ஏமாற்றி வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்த வாலிபர்- போலீசில் புகார்
காதலியை ஏமாற்றி வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்த வாலிபர்- போலீசில் புகார்
திருமங்கலம்,
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலை சேர்ந்தவர் 24 வயதான இளம்பெண். இவர் திருப்பூரில் பனியன் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இதே நிறுவனத்தில் பணிபுரிந்தவர் திருமங்கலம் பன்னீகுண்டு கிராமத்தை சேர்ந்த வீரனகுமார் (34). ஒரே நிறுவனத்தில் பணிபுரிந்ததால் இருவரும் பழக்கம் ஏற்பட்டு பழகி வந்தனர். பின்பு இருவரும் காதலித்து உள்ளனர். திருமணம் செய்து கொள்வதாக கூறி பல இடங்களுக்கு வீரனகுமார், அந்த இளம்பெண்ணுடன் சுற்றியுள்ளார். இந்தநிலையில் கடந்த மாதம் வீரனகுமாருக்கு மற்றொரு பெண்ணுடன் திருமணம் நடந்துள்ளது.
இது குறித்து தாமதமாக தகவல் அறிந்த அந்த இளம்பெண் திருமங்கலம் பன்னீகுண்டு வந்து வீரனகுமாரிடம் கேட்கவே அவரும் அவரது தந்தை பாலகிருஷ்ணன் உள்ளிட்ட சிலரும் சேர்ந்து அவதூறாக பேசி சாதியை சொல்லி திட்டியுள்ளனர். இதனால் மனவிரக்தியடைந்த அந்த இளம்பெண் இது குறித்து சிந்துபட்டி போலீசில் புகார் செய்தார். போலீசார் வீரனகுமார், அவரது தந்தை பாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் மீது வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.