முடிக்கொண்டான் ஆற்றின் குறுக்கே அகலமான பாலம் கட்ட வேண்டும்


முடிக்கொண்டான் ஆற்றின் குறுக்கே அகலமான பாலம் கட்ட வேண்டும்
x
தினத்தந்தி 19 Jun 2023 6:45 PM GMT (Updated: 19 Jun 2023 6:46 PM GMT)

திருமருகல் அருகே முடிக்கொண்டான் ஆற்றின் குறுக்கே அகலமான பாலம் கட்ட வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

நாகப்பட்டினம்

திட்டச்சேரி:

திருமருகல் அருகே முடிக்கொண்டான் ஆற்றின் குறுக்கே அகலமான பாலம் கட்ட வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

புதிய பாலம்

திருமருகல் ஒன்றியம் கட்டுமாவடி மேலத்தெருவில் 50-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதி பொதுமக்கள் அன்றாடம் திருமருகல், திட்டச்சேரி, நாகப்பட்டினம், காரைக்கால், மயிலாடுதுறை, கும்பகோணம் உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று வர மேலத்தெருவில் இருந்து முடிக்கொண்டான் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள குறுகலான பாலத்தை கடந்து வாளாமங்கலம் பஸ் நிலையம் வந்து அங்கிருந்து பல்வேறு பகுதிகளுக்கு சென்று வருகின்றனர்.

அதேபோல் மேற்கண்ட பகுதியை சேர்ந்த பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகளும் இந்த பாலத்தை கடந்துதான் பல்வேறு பகுதிகளுக்கு சென்று வருகின்றனர். கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட இந்த பாலம் தற்போது வலுவிழந்து உள்ளது.

நடவடிக்கை

இதனால் ஆட்டோ, கார் மற்றும் அவசர உதவிக்கு ஆம்புலன்ஸ் செல்வதற்கு கூட வசதி இல்லாமல் 2 கிலோமீட்டர் தூரம் சுற்றி வரும் நிலை உள்ளது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என அப்பகுதி பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

எனவே கட்டுமாவடி ஊராட்சியையும், சீயாத்தமங்கை ஊராட்சியையும் இணைக்கும் வகையில், முடிக்கொண்டான் ஆற்றின் குறுக்கே உள்ள குறுகலான பாலத்தை இடித்து விட்டு அதே இடத்தில் அகலமான புதிய பாலம் கட்டித்தர வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story