இரணியல் அருகே சாலையோரம் காயங்களுடன் கிடந்தவர் சாவு
இரணியல் அருகே சாலையோரம் காயங்களுடன் கிடந்தவர் பரிதாபமாக இறந்தார்.
கன்னியாகுமரி
திங்கள்சந்தை:
இரணியல் அருகே உள்ள மேல்பாறையில் கடந்த 4-ந் தேதி 45 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் தலையில் பலத்த காயங்களுடன் கிடந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்தநிலையில் சிகிச்ைச பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார். அந்த நபர் வடமாநிலத்தை சேர்ந்தவராக இருக்கலாம் என தெரிகிறது. ஆனால் அவரது பெயர், ஊர் விவரங்கள் தெரியவில்லை.
இதுகுறித்து இரணியல் போலீசார் வழக்குப்பதிவு செய்து இறந்தவர் யார்? அவர் மது போதையில் விழுந்து காயம் அடைந்தாரா? அல்லது வேறு ஏதாவது காரணம் உண்டா? என விசாரணை நடத்தி வருகிறார்கள்.
--
Related Tags :
Next Story