நகைக்காக புதுப்பெண்ணை வெட்டிக்கொன்ற 2 பேருக்கு ஆயுள் தண்டனை


நகைக்காக புதுப்பெண்ணை வெட்டிக்கொன்ற     2 பேருக்கு ஆயுள் தண்டனை
x

புதுப்பெண்ணை நகைக்காக வெட்டி கொன்ற 2 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து ஸ்ரீவில்லிபுத்தூர் கோர்ட்டு தீர்ப்பு அளித்தது.

விருதுநகர்

ஸ்ரீவில்லிபுத்தூர்

புதுப்பெண்ணை நகைக்காக வெட்டி கொன்ற 2 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து ஸ்ரீவில்லிபுத்தூர் கோர்ட்டு தீர்ப்பு அளித்தது.

நகைக்காக கொலை

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள கீழ திருத்தங்கல் பகுதியை சேர்ந்தவர் செல்வமணிகண்டன்(வயது 28). இவரது மனைவி பிரகதி மோனிகா(24). இவர்களுக்கு திருமணமாகி 40 நாட்கள் கடந்த நிலையில் வீட்டில் தனியாக பிரகதி மோனிகா இருந்தார். அப்போது அதே பகுதியைச் சேர்ந்த பரமேஸ்வரி(42), அவரது மகன் ஈஸ்வரன் என்ற கோடீஸ்வரன்(22), இவரது நண்பர் சேகர் என்ற டைசன்(22) ஆகிய 3 பேரும் சேர்ந்து பிரகதி மோனிகாவை நகைக்காக வெட்டி கொலை செய்தனர்.

இதுதொடர்பாக செல்வமணிகண்டன் திருத்தங்கல் போலீசில் புகார் செய்தார். புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து பரமேஸ்வரி, கோடீஸ்வரன், சேகர் ஆகிய 3 பேரையும் கைது செய்து ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மகிளா நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

ஆயுள் தண்டனை

வழக்கை விசாரித்த நீதிபதி பகவதி அம்மாள், புதுப்பெண்ணை நகைக்காக கொலை செய்த ஈஸ்வரன் என்ற கோடீஸ்வரன், சேகர் என்ற டைசன் ஆகிய 2 பேருக்கும் ஆயுள்தண்டனையும் தலா ரூ.9 ஆயிரம் அபராதம் விதித்தும், பரமேஸ்வரிக்கு 7 ஆண்டு சிறைதண்டனையும், ரூ. 5000 அபராதம் விதித்தும் தீர்ப்பு கூறினார்.


Next Story