உறவினரை கொலை செய்த தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை
விருதுநகரில் மொய்ப்பணத்தகராறில் உறவினரை கொலை செய்த தச்சுத்தொழிலாளிக்கு ஆயுள்தண்டனை விதித்து விருதுநகர் மாவட்ட கூடுதல் நீதிபதி ஹேமந்த்குமார் உத்தரவிட்டார்.
விருதுநகரில் மொய்ப்பணத்தகராறில் உறவினரை கொலை செய்த தச்சுத்தொழிலாளிக்கு ஆயுள்தண்டனை விதித்து விருதுநகர் மாவட்ட கூடுதல் நீதிபதி ஹேமந்த்குமார் உத்தரவிட்டார்.
தச்சுத்தொழிலாளி
விருதுநகர் பெரியபேட்டையை சேர்ந்தவர் நாராயணன் (வயது 49). தச்சு தொழிலாளி. இவரது மகள் திருமணம் உசிலம்பட்டியில் நடந்தது. இதையடுத்து வரவேற்பு கடந்த 29.6.2015-ந் தேதி விருதுநகரில் நடைபெற்றது. திருமண வரவேற்பின் போது மொய் பணம் வசூைல, நாராயணன் அவரது மனைவி முத்துலட்சுமியிடம், தன்னிடம் தருமாறு கேட்டார். அப்போது நாராயணனின் உறவினரான கருப்பசாமி (29) என்பவர், முத்துலட்சுமியிடம் மொய்ப்பணத்தை கொடுக்க வேண்டாம் என்று கூறியதால் கருப்பசாமிக்கும், நாராயணனுக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டது.
ஆயுள் தண்டனை
இதில் கருப்பசாமி, நாராயணனை கீழே தள்ளி விட்டார். இதனை தொடர்ந்து வரவேற்பு நடந்த மண்டபத்தை விட்டு கருப்பசாமி வெளியே வந்தார். அப்போது நாராயணன் அவரை தச்சு உளியால் சரமாரியாக குத்தினார். இதில் படுகாயம் அடைந்த கருப்பசாமி மதுரை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனளிக்காமல் இறந்தார். இதுகுறித்து விருதுநகர் பஜார் போலீசார் வழக்குப்பதிவு செய்து நாராயணனை கைது செய்து வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை மாவட்ட கூடுதல் நீதிபதி ஹேமந்த் குமார் விசாரித்து தச்சு தொழிலாளியான நாராயணனுக்கு ஆயுள் தண்டனையும், ரூ. 5 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார்.