பெண்ணிடம் சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பி ஓடியவர்களை மடக்கிப்பிடித்த போலீசார்


பெண்ணிடம் சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பி ஓடியவர்களை மடக்கிப்பிடித்த போலீசார்
x

பெண்ணிடம் சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பி ஓடியவர்களை போலீசார் மடக்கிப்பிடித்தனர்

மயிலாடுதுறை

கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்குடி அருகே உள்ள குமராட்சி மெயின்ரோட்டில் ராஜன் வாய்க்கால் அருகே நேற்று காலை 8.30 மணி அளவில் இருசக்கர வாகனத்தில் வந்த ஒரு பெண்ணிடம் தங்கச் சங்கிலியை பறித்துக் கொண்டு 2 வாலிபர்கள் மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்றனர். இதுகுறித்து தகவல் அறிந்த கொள்ளிடம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மணிகண்டசுரேஷ் மற்றும் போலீசார் அவர்களை விரட்டிச் சென்று பனங்காட்டாங்குடி ஆற்றங்கரை பிள்ளையார்கோவில் அருகே மடக்கி பிடித்தனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவர்கள் சீர்காழி அருகே உள்ள வானகிரி கிராமம் மீனவர் காலனியை சேர்ந்த சந்திரன் மகன் ஜவகர் (வயது 22) மற்றும் செருதூர் எல்லையம்மன் கோவில் தெருவை சேர்ந்த காளியப்பன் மகன் கண்ணன் (27) என்பது தெரிய வந்தது. அவர்களை பனங்காட்டங்குடி கிராமத்திற்கு நேரில் வந்த சேத்தியாதோப்பு துணை போலீஸ் சூப்பிரண்டு ரூபன்குமார், குமராட்சி இன்ஸ்பெக்டர் அமுதா ஆகியோரிடம் கொள்ளிடம் போலீசார் ஒப்படைத்தனர். பின்னர் அவர்கள் 2 பேரும் குமராட்சி போலீஸ் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டனர்.


Next Story