கோழியை விழுங்கிய மலைப்பாம்பு பிடிபட்டது


கோழியை விழுங்கிய மலைப்பாம்பு பிடிபட்டது
x
தினத்தந்தி 27 July 2023 12:15 AM IST (Updated: 27 July 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

பூதப்பாண்டி அருகே கோழியை விழுங்கிய மலைப்பாம்பு பிடிபட்டது.

கன்னியாகுமரி

அழகியபாண்டியபுரம்:

பூதப்பாண்டி அருகே கோழியை விழுங்கிய மலைப்பாம்பு பிடிபட்டது.

பூதப்பாண்டி அருகே வடக்கு ஆண்டித்தோப்பு பகுதியை சேர்ந்தவர் தினகரன். இவருடைய வீடு முன்பு நேற்று ஒரு மலைப்பாம்பு கோழியை விழுங்கியது. இதனை பார்த்தவர்கள் அதிர்ச்சி அடைந்து சத்தம் போட்டனர். பின்னர் அந்த மலைப்பாம்பு அங்குள்ள ஒரு இடத்தில் உள்ளே சென்று பதுங்கியது. இதுபற்றி தகவல் அறிந்ததும் பூதப்பாண்டி வனச்சரக ஊழியர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பதுங்கிய மலைப்பாம்பை பிடித்தனர். பின்னர் அடர்ந்த வனப்பகுதிக்கு சென்று மலைப்பாம்பை விட்டனர்.


Next Story