குடும்பம் நடத்த வர மறுத்தகாதல் மனைவியை கொல்ல முயன்ற டிரைவர் கைது


தினத்தந்தி 16 March 2023 12:15 AM IST (Updated: 16 March 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

கயத்தாறு அருகே குடும்பம் நடத்த வர மறுத்த காதல் மனைவியை கொல்ல முயன்ற டிரைவர் கைது செய்யப்பட்டார்.

தூத்துக்குடி

கயத்தாறு:

கயத்தாறு அருகே குடும்பம் நடத்த வரமறுத்த காதல் மனைவியை கொல்ல முயற்சி ெசய்த டிரைவரை போலீசார் கைது செய்தனர்.

காதல் திருமணம்

கயத்தாறு அருகே தெற்கு இலந்தைகுளம் பஞ்சாயத்து ஆத்திகுளம் கிராமத்தை சேர்ந்தவர் மாரியப்பன். விவசாயி. இவரது மகன் மருதராஜ் (வயது 32). டிரைவராக வேலை பார்த்து வருகிறார். அதே ஊரைச் சேர்ந்த கோபால் மகள் கன்னியம்மாள்(25). இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள். இந்த நிலையில் இருவரும் காதலித்து வந்தனர். இதற்கு இருவீட்டாரும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதை மீறி இருவரும் 5 ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் ெசய்து கொண்டனர்.

கருத்து வேறுபாடு

திருமணத்திற்கு பிறகும் இருவீட்டாரும் ஏற்றுக் கொள்ளாததால், இருவரும் தனியாக வசித்து வந்தனர். இவர்களுக்கு ஒரு வயதில் ஆண் குழந்தை உள்ளது. இந்த நிலையில் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு உருவானதால் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் கடந்த 6 மாதங்களாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.

கன்னியம்மாள் குழந்தையுடன் உறவினர் ஒருவர் வீட்டில் இருந்து வந்தார். அவரை தன்னுடன் குடும்பம் நடத்த வருமாறு மருதராஜ் அழைத்து வந்தார். சம்பவத்தன்று கன்னியம்மாள் தங்கியிருந்த வீட்டிற்கு ெசன்ற மருதராஜ், தன்னுடன் குடும்பம் நடத்த வருமாறு அழைத்துள்ளார்.

மனைவி மீது தாக்குதல்

அவருடன் கன்னியம்மாள் சென்றுள்ளார். சொந்த ஊரில் இருக்க வேண்டாம் என்று கூறிய மருதராஜ், குழந்தையுடன் அவரை தென்காசி மாவட்டம் ஆலங்குளத்துக்கு அழைத்து சென்றுள்ளார். அங்கு இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் மருதராஜ் அடித்து உதைத்ததில் கன்னியம்மாள் முகத்தில் காயம் ஏற்பட்டுள்ளது. அவரிடம் இருந்து தப்பி வந்த அவர் கயத்தாறு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

இதை தொடர்ந்து மருதராஜையும், கன்னியம்மாளையும் ேபாலீஸ் நிலையத்துக்கு அழைத்து கயத்தாறு போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது, மருதுராஜூவுடன் குடும்பம் நடத்த செல்லமாட்டேன் என கன்னியம்மாள் திட்டவட்டமாக தெரிவித்தாராம். இதில் மனமுடைந்த மருதுராஜ் டீ குடித்து விட்டு வருவதாக போலீசாரிடம் கூறிவிட்டு, கயத்தாறு பஜாருக்கு சென்றுள்ளார்.

கத்தியுடன் வந்தார்

அங்குள்ள கடை ஒன்றில் அவர் கத்தியை வாங்கி மறைத்து வைத்து கொண்டு ேபாலீஸ் நிலையத்துக்கு வந்துள்ளார். இதை கவனித்த போலீசார், அவரிடம் இருந்து கத்தியை பறிமுதல் செய்து விசாரித்தனர். விசாரணையில், மனைவியை கொலை செய்ய அவர் திட்டமிட்டு கத்தி வாங்கி வந்தது தெரிய வந்துள்ளது. இதுகுறித்து கயத்தாறு சப்-இன்ஸ்பெக்டர் பால் வழக்கு பதிவு செய்து மருதராஜை கைது செய்தார். பின்னர் கோவில்பட்டி கோர்ட்டில் ஆஜர்செய்யப்பட்ட அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.


Next Story