நாடக நடிகரிடம் நகை பறித்த 3 வாலிபர்கள் கைது
தூத்துக்குடியில் நாடக நடிகரிடம் நகை பறித்த 3 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.
தூத்துக்குடியில் நாடக நடிகரிடம் நகைபறித்த 3 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.
ஓரின சேர்க்கையாளர்கள்
தூத்துக்குடியை சேர்ந்த 19 வயது வாலிபர் ஒருவர் தனது ஸ்மார்ட் போனில் ஓரின சேர்க்கையாளர்கள் அடங்கிய ஒரு செயலியை பயன்படுத்தி வந்தாராம். அந்த செயலியில் உள்ளவர்கள் சாட்டிங் செய்து கொள்வார்களாம். விருப்பம் உள்ளவர்கள் தனியாக சந்தித்துக் கொள்வதும் வழக்கம் என்று கூறப்படுகிறது. இந்த செயலி மூலம் தூத்துக்குடி அருகே உள்ள ஜெகன் என்ற ஒரு நாடக நடிகரும், தூத்துக்குடி வாலிபரும் சாட்டிங் செய்து உள்ளனர்.
நகைகள் பறிப்பு
அதன்பிறகு அந்த வாலிபர், நாடக நடிகரை தூத்துக்குடிக்கு அழைத்து உள்ளார். அங்கு ஒரு மறைவிடத்தில் அவர்கள் சந்தித்து உள்ளனர். சிறிது நேரத்தில் அந்த வாலிபரின் 2 நண்பர்கள் அங்கு வந்து உள்ளனர். அதன்பிறகு, 3 பேரும் சேர்ந்து நாடக நடிகர் அணிந்து இருந்த 1½ பவுன் தங்கசங்கிலி, மோதிரம், ஒரு செல்போன் உள்ளிட்டவற்றை பறித்து சென்று விட்டார்களாம்.
3 வாலிபர்கள் கைது
இது குறித்த புகாரின் பேரில் தூத்துக்குடி தாளமுத்துநகர் போலீசார் வழக்கு பதிவு செய்து 19 வயது நிரம்பிய 3 வாலிபர்களை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து நகை, செல்போனை மீட்டனர். இந்த சம்பவம் தூத்துக்குடியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.